உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை கொழும்புக்கு வரவழைக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கலந்துரையாடல், எதிர்வரும் சனிக்கிழமை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாளை (06) நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் தடவையாகும்.
தேர்தல் தொடர்பான திட்டங்கள் மற்றும் அது தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Link : https://namathulk.com