தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக கல்பனா பணியாற்றியுள்ளார்.
தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளுக்கும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
அசாத்திய குரல் திறமைகொண்ட இவருடைய பாடல்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ல நிலையில், பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை உள்ளெடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த இவருடைய வீட்டின் கதவுகள் கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில், போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கிய நிலையில் இருந்த கல்பானாவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகி கல்பனாவுக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிட்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், இவர் அபாயத்திலிருந்து மீண்டுள்ளதாகவும் நுரையீரலில் தண்ணீர் சேர்ந்ததால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்பனாவின் மகள் தயா பிரசாத் பிரபாகர், இது தற்கொலை முயற்சி அல்ல, ஆனால் மன அழுத்தத்தால் ஏற்பட்ட தற்செயலான அதிகப்படியான அளவு என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
“என் அம்மா ஒரு பாடகி, ஒரே நேரத்தில் தனது எல். எல். பி மற்றும் பிஎச்டி படிப்பைத் தொடர்கிறார், இது தூக்கமின்மைக்கு வழிவகுத்தது. தூக்கமின்மைக்கு மருத்துவர்கள் அவளுக்கு மருந்துகளை பரிந்துரைத்தனர், மேலும் அவள் தற்செயலாக அதிகப்படியான அளவை எடுத்துக் கொண்டாள். இது ஒரு சிறிய அளவுக்கு அதிகமாக இருந்தது, ஆனால் இது தற்கொலை முயற்சி அல்ல “என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அவர் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Link : https://namathulk.com