பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்தியா விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டார்.
இந்தப் பயணத்தின் போது பொருளாதார உறவுகள் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என இந்திய உயர்ஸ்தானிகராலயமும் கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com