அண்மைக்காலமாக, சமூக ஊடகங்களில் மத்திய வங்கியின் பெயரை பயன்படுத்தி பல்வேறு விளம்பரங்கள் உலா வந்தவண்ணம் உள்ளன.
இது தொடர்பில், இலங்கை மத்திய வங்கியும் பொதுமக்களுக்கு போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இணையத்தில் பரவும் மோசடி விளம்பரங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த விளம்பரங்கள், சிறிய முதலீடுகளுக்கு கணிசமான நிதி வருமானத்தை இலங்கை மத்திய வங்கி வழங்குவதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
மேலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செய்யப்படும் இவ்வாறான விளம்பரங்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் படங்களை பயன்படுத்துவதால், இது மக்களை தவறாக வழிநடத்த வாய்ப்பளிக்கும் எனவும், இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Link : https://namathulk.com