யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தற்போது நாளாந்தம் விமான சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலாலியில் இருந்து சென்னைக்கு மாத்திரம் முன்னெடுக்கப்படும் இந்த சேவையானது நாள் ஒன்றில் ஒரு தடவை மாத்திரமே முன்னேடுக்கப்படுகிறது.
இந்நிலையில் மற்றுமொரு சேவையை, தமிழகத்தின் இன்னொரு விமான நிலையத்திலிருந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்தின் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Indigo விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்கு புறப்பட்டு பிற்பகல் 02.25 க்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.
அதேபோல யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 க்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 க்கு சென்றடையும் என Indigo விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
Link : https://namathulk.com
