உள்நாட்டு வருவாய் துறைக்கு செலுத்த வேண்டிய முழு வரி வருமானமும் வசூலிக்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் உள்நாட்டு வருவாய் துறை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது
இதன்போது, இந்த ஆண்டுக்கான உள்நாட்டு வருவாய் துறையின், இலக்கு வருமானத்தை அடைவதற்கு தேவையான உத்திகள் குறித்து விரிவான கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இதுவரையில் வசூலிக்கப்படாத வருமானத்தை மீட்பதற்கு தற்போதுள்ள வழிமுறைகளை விட அதிக தலையீட்டு அணுகுமுறையின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com