தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் தம்பதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சம்பவம் தொடர்பிலான நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com
