இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் அடுத்த மறுசீரமைப்பு 2026க்கு பிறகு நடத்தப்பட வேண்டுமென 2001ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகையின் அடிப்படையில்தான் நடக்கும்.
எனவே 1970களில் இருந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.
குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை அறிவித்திருந்த நிலையில், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டம் மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
Link : https://namathulk.com