முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் குறித்து வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
5 வருட காலப்பகுதியில் 384 மில்லியன் ரூபாய் செலவிட்டிருப்பதும், சில நாட்டு தலைவர்களின் மொத்த பதவிக் காலத்தில் பாதி மட்டுமே வெளிநாட்டுப் பயணச் செலவுகளாகக் காட்டப்பட்டுள்ளதும் வருத்தமளிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2015 முதல் 2019 வரை அவர் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் உத்தியோகபூர்வ பயணங்களாகவே இருந்ததாகவும் தனது அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டிற்குக் கிடைத்த பொருளாதார நன்மைகள், அவற்றுக்காக செலவிடப்பட்டதாக கூறப்படும் 384 மில்லியன் ரூபாயை விட அதிகம் எனவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, இந்த உத்தியோகபூர்வ பயணங்களுக்கு அவர் எப்போதும் வழக்கமான பயணிகள் விமானங்களை மட்டுமே பயன்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link : https://namathulk.com