மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஏற்பாடு செய்கின்ற ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2025 நிகழ்ச்சித்திட்டத்திற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2025 ஏப்பரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அழைப்பு விடுக்கின்றது.
கைத்தொழில் பிரிவு, தொழில்முயற்சி , கருத்திட்டப் பிரிவு மற்றும் நிறுவன, வெகுசன ஊடக மற்றும் சமூகப் பிரிவு எனும் மூன்று பிரதான பிரிவுகளின்கீழ் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.cea.lk பிரவேசிப்பதன் மூலமாக அல்லது 0112873447, 0112872278 அல்லது 0112888999 எனும் நேரடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமாக விண்ணப்பப் பத்திரங்களையும் மேலதிக விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
Link: https://namathulk.com