ஹமாஸின் ஆதரவாளர்கள் என்று கருதும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை முயற்சிகள் எடுத்துவருவதாகச் சொல்லப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பயன்படுத்தி இந்த நடைமுறையை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ‘ஹமாஸ் சார்பு’ சமூக ஊடக பதிவுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் இதன் மூலம் அடையாளம் காணப்பட உள்ளனர்.
மேலும் சட்டவிரோத போராட்டங்களை அனுமதிக்கும் மற்றும் ஆதரிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு நிதியளிப்பதை நிறுத்துவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அவர்கள் வந்த நாட்டிற்கு நிரந்தரமாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், அமெரிக்க மாணவர்கள் நிரந்தரமாக வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளமை வெளிநாட்டு மாணவர்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் கருத்துச் சுதந்திரத்தில் பாரிய கேள்வியை எழுப்பியுள்ள டிரம்ப்பின் குறித்த முடிவுகளுக்கு கண்டனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன.
Link : https://namathulk.com