இந்தியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T 20.2025 துடுப்பாட்டப்போட்டிகளில் பத்தாவது போட்டியாக இலங்கை மாஸ்டர்ஸ் அணியும் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியும் மோதியிருந்தன.
இதில் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை இலங்கை மாஸ்டர்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில் இந்த துடுப்பாட்டப் போட்டி தொடர்பான காணொலி ஒன்று இணையத்தில் பேசப்பட்டுவருகின்றது.
துடுப்பாட்டப்போட்டியின் பின் இலங்கை மாஸ்டர்ஸ் அணித் தலைவர் குமார் சங்ககார, மைதானத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கான இடத்தில் பாவிக்கப்பட்ட குடிநீர்ப் போத்தல்களைச் சேகரித்து துப்பரவு செய்யும் காட்சி அனைவராலும் பாராட்டப்பட்டு பகிரப்பட்டுவருகின்றது.
குமார் சங்ககார எல்லோராலும் நேசிக்கப்படுவதற்கான காரணத்தில் இதுவும் ஒன்றெனத் தலைப்பிட்டு ரசிகர்கள் இதனைப் பகிர்ந்துவருகின்றார்கள்.
Link : https://namathulk.com
