இன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறோம் என பிரதமர் ஹரிணி அமரகூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்புசார் சமதத்துவமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய காலமாகும் இதுவாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அரசியல் ஒதுக்கல்கள் ஆகியன பெண்களை பொருத்தமற்ற வகையில் பாதிப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கிராமிய சமூகங்கள், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தோட்டப்பகுதிகள் மற்றும் முறைசாரா தொழிற்றுறையைச் சேர்ந்தவர்கள் இவற்றுக்கு ஆளாவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரையொருவர் பாதுகாப்பதற்கும், எவரும் கைவிடப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு பெண்ணினதும் உரிமைகளும், பாதுகாப்பும் நிலைநிறுத்தப்படுவதற்கும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சர்வதேச மகளிர் தினத்தில், நாம் சொற்களுக்குள் கட்டுண்டிருக்காது, ஒன்றுபட்டு முன்னேறுவோம் என வலியுறுத்திய பிரதமர், நமக்கு முன்னுள்ள தலைமுறைக்காகவும், இன்று போராடுகின்றவர்களுக்காகவும், எதிர்கால தலைமுறைக்காகவும் உண்மையான, நீடித்த மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் கூறியுள்ளார்.
Link : https://namathulk.com