கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜானகி டி ஜெயவர்தன, தெஹிவளை கொஹுவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
59 வயதான இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் சுமனாராம வீதியில் பயணித்த போது, காரின் முன்சில்லில் கல் வைக்க சென்றுள்ளார்.
இதன்போது குறித்த கார் தன்னிச்சையாக செயற்பட்டதில் காரின் சில்லுக்குள் அவர் சிக்குண்டுள்ளார்.
உடனடியாக கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து கொஹுவல பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com