நாளை மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
Link: https://namathulk.com