திருகோணமலை, திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளை இந்திய அரசு செய்து தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தென்கயிலை என போற்றப்படுவதும் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றானதும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகள் நீண்ட காலமாக முடிவுறாமல் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய அரசானது, மற்றுமொரு பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சரர் கோவில் திருப்பணிகளை செய்து முடித்தது போல திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளையும் செய்துதர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தவகையில், இராஜகோபுரம் , மணிமண்டபம் , சக்திபீடம் , வெளி வீதி , பஞ்சலிங்கங்களை திருநிலைப்படுத்தல், முதலிய திருப்பணிகளை செய்து முடிக்க இந்திய அரசு உதவ வேண்டுமெனவும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Link: https://namathulk.com