முன்னாள் பொலிஸ் மாஅதிபரின் சொத்துக்கள் பறிமுதல் செயய்ப்படும் என பொதுமக்கள் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பிரதி அமைச்சர் இதனை கூறினார்.
இதன்படி, தேசபந்து தென்னகோன், தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com