புத்தளம் கலஹிட்டியாவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒரு வயது பெண் குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்று எதிர்திசையில் பயணித்த பஸ்சில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் ஓட்டுநர் உள்ளடங்கலாக ஒன்பது பேர் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும், இரண்டு சிறுவர்களும், ஒரு வயது பெண் குழந்தையும், சிறுமி ஒருவரும் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
இவர்களில் ஒரு வயது பெண் குழந்தையும் 32,36 வயதான இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com