உலகின் மிகவும் பிரபலமான இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க “பிக் பென்” கடிகார கோபுரத்தில் பாலஸ்தீனியக் கொடியுடன் ஏறிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபத்தான முறையில் வெறுங் காலுடன் கடிகார கோபுரத்தில் ஒட்டியபடி பாலஸ்தீனியக் கொடியுடன் அந் நபர் காணப்பட்டார்.
காஸாவிற்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குமான மோதல்நிலையின் தீவிரம் காரணமாக உலகெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களில் பலர் காஸாவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.