ஹட்டன், சிங்கமலை வனப்பகுதியில் நேற்றிரவு இரவு பரவிய தீ, கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் வனக் காப்பாளர் வி.ஜே.ருக்ஷன் தெரிவித்தார்.
டிக்ஓயா பட்டல்கல தோட்டத்தில் உள்ள காட்டில் ஒரு குழுவினரால் தீ மூட்டப்பட்டுள்ளது.
இந்த தீ சிங்கமலை வனப்பகுதி வரை பரவியதாகவும், வனப்பகுதிக்குள் பரவிய தீயினால் சுமார் ஒரு ஏக்கர் நிலம் த்கீக்கிரையாகியுள்ளதாகவும் வி.ஜே. ருக்ஷன் தெரிவித்தார்.
நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, சிலர் விலங்குகளை வேட்டையாடவும், பொழுதுபோக்குக்காகவும் தீ வைப்பதாக ஹட்டன் வனக் காப்பாளர் வி.ஜே. ருக்ஷன் கூறியுள்ளார்.
தீ வைப்பவர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், 051 2222580 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளளுமாறு ஹட்டன் பகுதி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Link: https://namathulk.com