பொலன்னறுவையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய் எண்ணெயை வைத்திருந்ததற்காகவும்,அதை கொண்டு சென்றதற்காகவும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் மற்றும் பொலிசார் இணைந்து நேற்று இரவு நடத்திய கூட்டு சோதனையின் போது, கர்மந்தபுர பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தரமற்ற தேங்காய் எண்ணெயை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவரும், பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக மற்றொருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, 7,700 லீட்டர் தரமற்ற தேங்காய் எண்ணெயுடன் 35பீப்பாய்கள், 7,920 லீட்டர் தேங்காய் எண்ணெயுடன் 36 பீப்பாய்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Link: https://namathulk.com