பெருந்தோட்ட துறையிலுள்ள தமிழ் பாடசாலைகளில் இந்திய ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தும் திட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆதரவளிக்கும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்
இதன்போது, தான் பதவியிலிருந்த காலத்தில், இந்த யோசனையை முன்வைத்த போது, மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்தது எனவும், ஆனால், தற்போதைய அரசாங்கம் தனது யோசனையை செயற்படுத்த ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் உயர்தரத் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக அனுமதி போன்ற பல்வேறு காரணிகளில் தாக்கம் செலுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
Link: https://namathulk.com