நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் தேடப்படும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் தவறான தகவலை வழங்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையடக்க தொலைபேசி ஊடாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு குறைத்த இளைஞன் தவறான தகவலை வழங்கியுள்ளார்.
திக்வெல்ல பகுதியை சேர்ந்த லஹிரு சம்பத் என்ற குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தனது செயல்கள் மூலம் விசாரணையை தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கிய இஷாரா செவ்வந்தி இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com