சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
டுடெர்ட்டே பதவியில் இருந்த காலத்தில், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கினார்.
இதில் 6,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காவல்துறைத் தரவுகள் தெரிவிக்கின்ற நிலையில்,சுயாதீன கண்காணிப்பாளர்களின் கருத்தின்படி நீதிக்குப் புறம்பான கொலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது.
” இன்டர்போல் மணிலா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ஐ. சி. சி) கைது உத்தரவின் அதிகாரப்பூர்வ நகலைப் பெற்றது” என்று ஜனாதிபதி தகவல் தொடர்பு அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக கைது செய்யும் உத்தரவின் அறிவிப்பை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் குறித்த முன்னாள் ஜனாதிபதி தற்போது அதிகாரிகளின் காவலில் உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com