அதிவேக வீதிகளில் இன்று முதல் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.ஏ.ஏ.எம். பி. சூரிய பண்டார தெரிவித்தார்.
உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்காக இந்த அதிகாரிகளை ஈடுபடுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பணிப்பாளர் கூறினார்.
இதன்படி, தெற்கு அதிவேக வீதி , தெற்கு அதிவேக வீதி நீட்டிப்பு, கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதி, புதிய களனி பாலம் மற்றும் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால், உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்காக இந்த அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு-கட்டுநாயக்க வீதியில் புதிய களனி பாலம் மற்றும் கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியில் சொத்துக்களைப் பாதுகாக்க 20 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com