2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய மக்கள் போராட்டத்தின் போது, வீடுகளுக்கு சேதம் விளைவித்தமைக்காக கோரப்படும் இழப்பீட்டுத் தொகைகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரவீந்திரநாத் தாபரே இன்று இந்த மனுவை தாக்கல் செய்தார்.
பொய்யான கூற்றுக்கள் மூலம் பெறப்பட்ட எந்தவொரு நிதியையும் திரும்பப் பெற உத்தரவிடுமாறும் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் பாதுகாப்பு படைத் தலைவர் சவேந்திர சில்வா, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட பதினைந்து பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
Link : https://namathulk.com