கனமழைக் காரணமாக, பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை திறக்கப்பட்டதாகவும், இன்றும் அதனை திறந்தே வைக்க வேண்டியிருக்கும் என பொலன்னறுவை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.சாந்த தெரிவித்துள்ளார்.
மழைக் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், அதன் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி உயர்த்தப்பட்டு, வினாடிக்கு 530 கன அடி நீர் அபங் கங்கைக்கு வெளியேற்றப்பட்டது.
பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 113,200 ஏக்கர் அடி வரை அதிகரித்ததால், இந்த வான் கதவுகளை திறக்க வேண்டியிருந்தது என்று நீர்ப்பாசன பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com
