பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்து முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
இதன்படி, அவர் தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி ழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தோடு தொடர்புடையவராவார்.
இருப்பினும், குற்றப் புலனாய்வுத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில், தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணையை மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
Link : https://namathulk.com
