கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 18வது ஐபிஎல் சீசனுக்கு பெங்களூரிவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மறு சுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த மைதானம் ஐபிஎல் அணியான ரோயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணியின் மைதானமாக உள்ளது.
இந்த சீசனுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதான பயன்பாட்டுக்கு விநியோகிக்க பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
மைதான பராமரிப்பு சார்ந்து நாள் ஒன்றுக்கு சுமார் 75,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அதை கப்பன் பார்க் நீர் மறுசுழற்சி நிலையத்தில் இருந்து விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 18வது ஐபிஎல் சீசனில் மொத்தம் 7 போட்டிகள் பெங்களூருவில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com