முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை அத்துமீறி சூரையாடியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இந்நிலையில், வன்னியில் இடம்பெறும் சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, வனவளத்தைப் பாதுகாக்க வனவளத் திணைக்களம் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த 2009ஆம் இற்கு முன்பு மரக்குற்றிகளால் நிரப்பப்பட்ட கனகரக வாகனங்களைக் கண்டதில்லை எனவும், மரம் அரிகின்ற இயந்திர வாள்களின் கொடூர ஓசையைக் கேட்டதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
அத்துடன், முன்னைய ஆட்சியில் திணைக்களங்களால் காணித்திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர், தற்போதைய ஆட்சியில் இவ்வாறான காணித் திருட்டுக்கள் நீக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com