இதய செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் செயற்கை இதயம் பொருத்தப்பட்டு 100 நாட்களைக் கடந்து வாழ்ந்து சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு இதய அறுவைச் சிகிட்சைக்கான மனித இதயம் கிடைப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த செயற்கை இதயத்தை ஒரு மாற்றீடாக மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
குயின்ஸ்லாந்தில் பிறந்த வைத்தியர்டேனியல் டிம்ஸ் கண்டுபிடித்த BiVACOR செயற்கை இதயம், உலகின் முதல் பொருத்தக்கூடிய சுழலும் இரத்த பம்புகளைக் கொண்டது. இதனால் ஒரு மனித இதயத்திற்கு முழுமையான மாற்றாக செயல்பட முடியும்.
மருத்துவ ஆய்வின் ஆரம்ப கட்டங்களில் உள்ள இந்த வடிவமைப்பு, இறுதி நிலை இதய செயலிழப்பு உள்ள நோயாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
“அடுத்த தசாப்தத்திற்குள் நன்கொடையாளர் இதயத்திற்காக காத்திருக்க முடியாத அல்லது நன்கொடையாளர் இதயம் இலகுவாகக் கிடைக்காத நோயாளிகளுக்கு செயற்கை இதயம் மாற்றாக மாறுவதை நாம் காண்போம்” என ஆஸ்திரேலிய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் செயற்கை இதயத்தின் கால அளவு 100 நாட்களுக்கு மேற்பட்டதாக காணப்படும் என்றும் இது தானம் செய்யப்பட்ட ஒரு இதயத்தின் கால அளவை விட (3000 நாட்கள்) குறைவானதாகும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Link : https://namathulk.com