கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட கடற்றொழில் தொடர்பான சட்ட மூல வரைபை தற்போதைய அரசாங்கம் சட்ட மூலமாக்க முனைவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
யாழ், வடமராட்சி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
இதன்போது, கடந்த அரசாங்கத்தில், அப்போதைய கடற்றொழில் அமைச்சர் குறித்த சட்ட மூல வரைபை கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்களை அழைத்து பிரதிகளை வழங்கியதாக கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதி குறிப்பிட்டார்.
ஆனால் அந்த பிரதியில் நடுப்பகுதி அச்சிடப்படாமல் விநியோகிக்கப்பட்டதை தொடர்ந்து, மீனவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்த முனைவதாகவும், மீனவர்களுக்கு அந்த சட்ட மூல பிரதியில் என்ன இருக்கின்றது என தெரியாது எனவும் கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதி வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com