கம்பஹா, சீதுவ பகுதியில், 2022 செப்டம்பரில் பெளத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த 24 வயதுடைய யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து இலங்கை வந்த குறித்த யுவதி , நேற்று அதிகாலை குடிவரவு அதிகாரிகளால் விமான நிலைய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சீதுவ பகுதியில் பெளத்த துறவியை கொலை செய்து, விகாரைக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளையடிக்க குறித்த யுவதி மற்றொரு துறவியுடன் திட்டமிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள யுவதியை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com