வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்திய, இலங்கை விசுவாசிகளின் பங்கேற்புடன் இராமேஸ்வரம் மற்றும் யாழ் மறைமாவட்ட ஒருங்கிணைப்புடன் இன்று கொடியேற்றப்படவுள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருச்சிலுவை பாதை திருப்பலி கருணை ஆராதனை என்பன நடைபெறவுள்ளன.
இதனையடுத்து புனித அந்தோனியாருடைய திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளது.
நாளை காலை நடைபெறவுள்ள திருநாள் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறும் என யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பில் ஆயர் இல்லம் இலங்கை கடற்படை இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
Link : https://namathulk.com