திருகோணமலை மூதூரில் இரண்டு பெண்கள் குரூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
68,74 வயதான இரண்டு பெண்களே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பாதுகாப்பின் கீழ்சம்பவம் இடம்பெற்ற வீட்டிலேயே சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மூதூர் நீதவான் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்படவுள்ளதாக பொலிசார் கூறினர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Link : https://namathulk.com