ஹட்டன், கொட்டகலை நகரிலுள்ள கோவிலொன்றில் திருவிழாவுக்காக அழைத்துவரப்பட்ட யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று இரவுவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோவிலில் தேர் பவனி முடிவடைந்த பிறகு கோவில் வளாகத்தில் யானை கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இளைஞர் ஒருவர் யானைக்கு உணவு வழங்குவதற்கு முற்பட்டவேளையிலேயே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
காயமடைந்த இளைஞன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்தவேளை யானை பாகன் மதுபோதையில் இருந்துள்ளதாகவும், அதனால்தான் யானைக்கு உணவளிப்பதற்கு இளைஞன் முற்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Link : https://namathulk.com