அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
பொலிசார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து இன்று (14) காலை கல்நேவ பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பெண் வைத்தியரின் காணாமல் போன கையடக்க தொலைபேசியை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர் நேற்று (13) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு பொலிசாருக்கு அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
Link : https://namathulk.com