இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். குறித்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘கூகுள் குட்டப்பா’ மற்றும் ‘நாடு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.
தற்போது அவர் காவற்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படமான ‘சரண்டர்’ திரைப்பத்தின் முதற்தோற்றம் வெளியாகியுள்ளது.
இதனை விஜய் சேதுபதி மற்றும அறிவழகன் இணைந்து வெளியிட்டுவைத்துள்ள நிலையில், இத் திரைப்படம் க்ரைம் – ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கிறதாம்.
விக்டர் குமார் தயாரித்துள்ள இத் திரைப்படத்தை கெளதமன் கணபதி இயக்கி இருக்கிறார். இதி இசையமைப்பாளராக விகாஸ் பதீசாவும் ஒளிப்பதிவாளராக மெய்யேந்திரனும் பணியாற்றியுள்ளனர்.
இதில் தர்ஷன், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com