சர்வதேச வர்த்தக மையத்தின் நிர்வாக இயக்குநர் பமீலா ரோஸ்மேரி கோக்-ஹாமில்டன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியா இடையிலான சந்திப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, டிஜிட்டல் மாற்றம், சிறு மற்றும் நடுத்தர நிறுவன மேம்பாடு மற்றும் பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார முன்னுரிமைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
அத்துடன், டிஜிட்டல் மயமாக்கல், சந்தை அணுகலை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன கட்டமைப்புகள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பரந்த பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஒருங்கிணைத்தல், பொருளாதாரத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக முதலீட்டுக்கு ஏற்ற கொள்கைகளை செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, சுற்றுலா, ஏற்றுமதி, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், கல்வி, தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி போன்ற முக்கிய துறைகளை அடையாளம் கண்டு கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்னார்.
Link : https://namathulk.com