இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில், இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
இந்தப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் இலங்கையுடன் பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தையும் இந்தியப் பிரதமர் திறந்து வைப்பார் எனவும் அமைச்சர் கூறினார்.
Link : https://namathulk.com