2025 ஏப்ரல் 02 முதல் நடைமுறைக்கு வரும் பரஸ்பர வரிகள் குறித்து அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, பரஸ்பர வரிகளை இலங்கை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து விவாதங்கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டின் பொருளாதார நிலைமை நிலையற்றதாக இருப்பதால் ஏற்றுமதிகள் மீதான இத்தகைய வரிகளை இலங்கை தாங்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நிதி அமைச்சு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் வணிக சமூகத்தின் பிரதிநிதிகளுடன் அடுத்த மாதம் அமெரிக்காவில் உயர்மட்ட இலங்கை வணிக மன்றம் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க வர்த்தக அலுவலக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்களின் போது கட்டணங்கள் தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்கவும், நிவாரணம் பெறவும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார்.
Link: https://namathulk.com