வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் போது, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பான நம்பகமான தகவல்களுக்கு, 1989 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போதே அவர் இதனை கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஏற்பாடு செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நபர்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இதன்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் காணலாம் என அமைச்சுசார் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துட்ன, எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வசூலித்தால் அல்லது உரிமம் இல்லாமல் ஏதேனும் செயல்பாட்டில் ஈடுபட்டால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளிக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
Link: https://namathulk.com