மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பஸ்சும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி முகைதீன் பள்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த பஸ் கல்லடிபால சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com