நுவரெலியா, நானுஓயா டெஸ்போட்டில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடக நிகழ்ச்சி நேற்று இரவு 9.30 ஆரம்பிக்கப்பட்டு இன்று 7:00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
குறித்த பொன்னர் சங்கர் வரலாற்று நாடக நிகழ்ச்சி நானுஓயா டெஸ்போட் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திடலில் க.குணசேகரம் மாஸ்டரின் நெறிபடுத்தலில் கீழ் இடம்பெற்றது.
அண்ணன்மார் சுவாமி என்று அழைக்கப்படும் பெரிய அண்ணன் மற்றும் சங்கர் என்று அழைக்கப்படும் சின்ன அண்ணன் ஆகிய இரு சகோதரர்களின் கதையே பொன்னர் சங்கர் வரலாற்று கதையாகும்.
ஒவ்வொரு வருடமும் நானுஓயா டெஸ்போட்டில் குறித்த பொன்னர் சங்கர் வரலாற்று கதையினை நாடகமாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com