வடக்கு மசிடோனியாவின் கோக்கானியில் உள்ள ஒரு நெரிசலான இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 155 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மசிடோனியாவின் தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் கோக்கானி நகரம் அமைந்துள்ளது.
இந்த நகரிலுள்ள நெரிசல் மிகுந்த களியாட்ட விடுதியில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது
இசைநிகழ்சியின் போது பயன்படுத்தப்பட்ட இரசாயன வாயு அடங்கிய பொருட்களால் தீ பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.
Link: https://namathulk.com