மன்னாரில் அதானி குழுமத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மன்னார், வெடித்தலத்தீவில் காற்றாலை மின் திட்டத்திற்காக இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், குறித்த திட்டத்திலிருந்து விலகுவதாக , இலங்கை முதலீட்டு சபையின் தலைவருக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தார்.
அதற்கமைய சுற்றுச்சூழல் நீதி மையம் (CEJ) உள்ளிட்ட மனுதாரர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
Link : https://namathulk.com