இலங்கையில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுக்க இந்தியாவின் அதானி குழுமம் தொடர்ந்தும் ஆர்வமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான மின்னுற்பத்தி திட்டங்களை மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலில் இணைத்துக்கொள்ள இந்தியாவின் அதானி குழுமம் ஆர்வமாக உள்ளதென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் , இலங்கையில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட காற்றாலை திட்டத்திலிருந்து விலகுவதாக அதானி குழுமம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில் இரு தரப்பிற்குமாக கட்டண வசூல் காரணமாக தொடர்ந்தும் அதானி குழுமத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கும், அதனை குழுமத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் , எதிர்வரும் ஜூன் மாதமளவில் அடுத்தக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com