திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
இதன்போது, சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாமல் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
Link : https://namathulk.com