அரசாங்கம் ஒன்லைன் ஹோட்டல் முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, இந்த துறையில் ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடிக்க பல முன்பதிவு தளங்களை அறிமுகப்படுத்த உள்ளூர் நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், Booking.com உள்ளிட்ட தற்போதைய தளங்கள் இலங்கையில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யாமலோ அல்லது வரிகளை பங்களிக்காமலோ செயல்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஏற்கனவே உள்ள ஒன்லைன் தளங்களை விதிமுறைகளுக்கு இணங்க செய்தல் மற்றும், அவற்றின் உரிய வரிகளை பங்களிப்பதையும் உறுதிசெய்வதோடு, புதிய தளங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
அதேபோல, Booking.com போன்ற நிறுவனங்கள் இலங்கையிலிருந்து குறிப்பிடத்தக்க இலாபத்தை ஈட்டினாலும், தேவையான வரி வருவாயை செலுத்துவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Link : https://namathulk.com