வவுனியா புதிய பஸ் நிலைய இருக்கைகள், பயணிகள் அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய பஸ் நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும், இருக்கைகளில் இருந்து விழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்தின் பிரதான நுழைவாயிலாகவும், பல மாவட்டங்களில் வந்து செல்வோர் அதிகமாக கூடும் இடமாகவும் உள்ள பிரதான பஸ் நிலையத்தின் இருக்கைகளே இவ்வாறு உடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com